செந்தில் பாலாஜி உடம்பில் இந்த பிரச்சனை தான் இருக்கிறது: அமைச்சர் சொன்ன தகவல்
மருத்துவமனையில் இருக்கும் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜி உடல்நிலை
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு செந்தில் பாலாஜிக்கு மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், அவரது இதயத்தில் 3 அடைப்புகள் இருந்ததை உறுதி செய்தனர். பின்பு, உயர்நீதிமன்றத்தின் அனுமதியுடன் காவிரி மருத்துவமனையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து கடந்த 15 -ம் திகதி செந்தில் பாலாஜிக்கு தலை சுற்றல், தலைவலி, வாந்தி உள்ளிட்ட பிரச்சனையால் சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
பின்பு, அவர் மேல்சிகிச்சைக்காகவும், பாதுகாப்பிற்காகவும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அன்றிரவே மாற்றப்பட்டார்.
அமைச்சர் கூறியது..
செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "செந்தில் பாலாஜி நலமாக உள்ளார். நேற்று அவருக்கு பித்தப்பையில் கல் இருப்பதாக கூறினார்கள். இன்று ஸ்கேன் எடுத்து பார்த்ததில் அது கல் இல்லை என்றும், சிறிய கொழுப்பு கட்டிகள் தான் என்றும் தெரியவந்தது.
அவருக்கு உடல்சோர்வு இருப்ப்பதால் மருத்துவர்கள் பல பரிசோதனைகள் செய்கின்றனர். சோதனையின் முடிவில் எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கலாம் என மருத்துவர்கள் முடிவெடுப்பார்கள்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |