அமைச்சர் செந்தில்பாலாஜியின் தற்போதைய நிலை என்ன?
இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி இயற்கையாக சுவாசித்து வருவதாகவும், வேறு அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, விசாரணைக்காக அழைத்து செல்லும் போது நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த போது இதயத்துக்கு செல்லும் குழாயில் அடைப்பு இருப்பது தெரியவந்தது, இதனையடுத்து பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யவேண்டுமென மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
இதனையடுத்து செந்தில் பாலாஜியின் மனைவி உயர்நீதிமன்றத்தில் அளித்த மனுவின் அடிப்படையில், காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவருக்கு திட்டமிட்டபடி 21ம் தேதி இதய அறுவைசிகிச்சை நடந்தது, அவசர சிகிச்சை பிரிவில் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்தார் செந்தில்பாலாஜி.
சிகிச்சைக்கு பின்னர் அவரது உடல்நிலையில் சீரான முன்னேற்றம் இருந்து வருவதாகவும், மருத்துவர்கள் தொடர்ச்சியாக கண்காணித்து வருவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இந்நிலையில் காவேரி மருத்துவமனையின் 7வது தளத்தில் இருந்து 4வது தளத்துக்கு செந்தில் பாலாஜி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இயற்கையாகவே சுவாசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |