மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் செந்தில் பாலாஜி.., மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
செந்தில் பாலாஜி
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு செந்தில் பாலாஜிக்கு மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், அவரது இதயத்தில் 3 அடைப்புகள் இருந்ததை உறுதி செய்தனர்.
பின்பு, உயர்நீதிமன்றத்தின் அனுமதியுடன் காவிரி மருத்துவமனையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
மீண்டும் சிறையில்..
இதனைத்தொடர்ந்து கடந்த 12 -ம் திகதி செந்தில் பாலாஜிக்கு தலை சுற்றல், தலைவலி, வாந்தி உள்ளிட்ட பிரச்சனையால் சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
பின்பு, அவர் மேல்சிகிச்சைக்காகவும், பாதுகாப்பிற்காகவும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அன்றிரவே மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொண்ட சிறப்பு மருத்துவ குழு, தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தது.
இந்நிலையில், இன்று (டிச.7) காலை 6.30 மணியளவில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்பு, புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிறையில் அடைக்கப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |