இந்திய அணிக்கு கடுமையான நெருக்கடி கொடுக்கும் தமிழர்: அரைசதம் விளாசல்
இந்திய அணிக்கு எதிரான டெஸ்டில் தென் ஆப்பிரிக்க வீரர் செனுரன் முத்துசாமி அரைசதம் அடித்தார்.
ஸ்டப்ஸ் 49 அவுட்
தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நடந்து வருகிறது. 
முதல் இன்னிங்சை நேற்று தொடங்கிய தென் ஆப்பிரிக்கா இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்து வருகிறது.
ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 49 ஓட்டங்களும், டெம்பா பவுமா 41 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அணியின் ஸ்கோர் 246 ஆக உயர்ந்தபோது டோனி டி ஸோர்சி 28 ஓட்டங்களில் சிராஜ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 
செனுரன் முத்துசாமி மிரட்டல்
அதன் பின்னர் தமிழக பூர்வீக வீரரான செனுரன் முத்துசாமி (Senuran Muthusamy) மற்றும் கைல் வெர்ரெய்னே வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
நிதானமாக ஆடி நெருக்கடி கொடுத்த செனுரன் முத்துசாமி 121 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் அரைசதம் அடித்தார்.
மறுமுனையில் கைல் வெர்ரெய்னே (Kyle Verreynne) பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்த தென் ஆப்பிரிக்க அணி 330 ஓட்டங்களை கடந்துள்ளது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |