உக்ரைன் மன்னிப்பு கேட்காவிட்டால்... தீவிர நடவடிக்கை தொடர்பில் தென் கொரியா எச்சரிக்கை
Seoul warns further action if Ukraine does not apologise: உக்ரைன் மன்னிப்பு கோராவிட்டால், மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சியோல் எச்சரிக்கிறது.
இரண்டு வடகொரியப் போர்க்கைதிகள் தெற்குப் பகுதிக்கு அனுப்பப்பட்ட விவரத்தை வெளியிட்டதற்காக உக்ரைன் பகிரங்க மன்னிப்பு கோராவிட்டால், மேலதிக நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக தென் கொரிய ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.
தேசத்தின் கண்ணியம்
உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி கடந்த வாரம் ஐ.நா பொதுச் சபையில் இந்தத் தகவலை வெளியிட்ட நிலையில், இந்த விவகாரம் இரகசியமாக வைக்கப்பட வேண்டிய ஒன்று என்று கூறிய தென் கொரியா கோபமடைந்தது.

இந்த நிலையில், உக்ரைனின் வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா தெரிவிக்கையில், இச்சூழ்நிலையை ஒரு தூதரக ரீதியிலான தவறான புரிதல் என்று குறிப்பிட்டதுடன், அதைக் தீர்ப்பதற்கான முயற்சிகளில் கீவ் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
ஆனால் இந்த விளக்கத்தை தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே-மியுங் நிராகரித்ததுடன், இது கொரிய மக்களின் மற்றும் தேசத்தின் கண்ணியத்தைப் பற்றியது என்று கூறினார்.
வட கொரிய வீரர்களின் குடும்பங்களைப் பாதுகாப்பதற்காகவும், அதேவேளையில் அந்த வீரர்களுக்குப் பதிலாக உக்ரேனியப் போர்க்கைதிகளை விடுவிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டதாக எழும் விமர்சனங்களைத் தவிர்க்க விரும்பியதாலும், இந்த நடவடிக்கையை ரகசியமாக வைத்திருக்குமாறு உக்ரைன் தான் கோரியதாக ஜனாதிபதி லீயின் அலுவலகம் கடந்த வாரம் தெரிவித்தது.
இதனிடையே, இந்த நடவடிக்கையை ரகசியமாக வைத்திருப்பதற்கான எந்தவொரு ஒப்பந்தமும் இரு நாடுகளுக்கும் இடையே இல்லை என்று ஜெலென்ஸ்கியின் அலுவலகம் பதிலளித்ததை அடுத்து இந்த விவகாரம் மேலும் தீவிரமடையச் செய்தது.
ஜெலென்ஸ்கியின் வெளிப்படுத்தலுக்குப் பிறகு லீயும் உள்நாட்டில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார்; வட கொரியாவை திருப்திப்படுத்துவதற்காகவே அந்தப் பரிமாற்றத்தை அவர் மறைத்ததாகத் தென் கொரிய எதிர்க்கட்சிகள் அவர் மீது குற்றம் சாட்டின.
போரைத் திணிக்க
உக்ரைன் போரில் ரஷ்யாவை ஆதரிக்கும் ஆயிரக்கணக்கான வட கொரிய வீரர்களில், அந்த இரு வீரர்களும், தாங்கள் தென் கொரியாவுக்கு அனுப்பப்பட விரும்புவதாக முன்னதாக உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தனர்.

இந்த விவகாரத்தில் கடும் கோபமடைந்துள்ள லீ, கொரிய தீபகற்பத்தில் போரைத் திணிக்க முயல்வதாக கீவ் மீது குற்றம் சாட்டியுள்ளார். ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்குப் பிறகு தென் கொரியா உக்ரைன் மீது அனுதாபம் காட்டி வருகிறது,
ஆனால் தீவிர போரில் ஈடுபட்டுள்ள எந்தவொரு நாட்டிற்கும் கொடிய ஆயுதங்களை வழங்காத தனது நீண்டகால கொள்கையை அது கடைப்பிடித்து வருகிறது.