ஐரோப்பிய ஒன்றிய Schengen பகுதியை பாதுகாக்க தனி அமைப்பு: பிரான்ஸ் யோசனை
ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைகளில்லாத Schengen பகுதி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் கூறியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு குறித்த அக்கறை, புலம்பெயர்தல் மற்றும் கொள்ளைநோய் ஆகிய விடயங்கள் அதற்கான அவசியத்தை உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு பிரான்சில், ஐரோப்பிய ஒன்றிய நீதித்துறை மற்றும் உள்துறை அமைச்சர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய மேக்ரான், Schengen Council என்னும் ஒரு அமைப்பு, இந்த எல்லைகளற்ற Schengen பகுதியை மீளாய்வு செய்து, அது தொடர்பான கூட்டு முடிவுகளை எடுக்கவேண்டும் என்றும், பிரச்சினைகள் ஏற்படும் நிலையில் ஒத்துழைப்பு நல்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த Schengen Council, வலிமையான, பாதுகாப்பான ஐரோப்பாவின் முகமாக மாறலாம் என்றும், எல்லைகளை கட்டுப்படுத்துவதன் மூலம் அதன் எதிர்காலமாகவே மாறலாம் என்றும் அவர் கூறினார்.
மார்ச் மாதம் 3ஆ திகதி, மீண்டும் ஐரோப்பிய ஒன்றிய நீதித்துறை மற்றும் உள்துறை அமைச்சர்கள் சந்திப்பு நிகழும்போது, இந்த Schengen Councilஇன் துவக்க விழா நடைபெறலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
பல ஆண்டுகளாகவே புலம்பெயர்தல் மற்றும் Schengen பகுதியின் வெளி எல்லைகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவிவருகின்றன.
இந்நிலையில், Schengen Council ஒன்றை உருவாக்கும் பிரான்சின் யோசனைக்கு ஜேர்மனியும், ஐரோப்பிய ஆணையமும் ஆதரவளித்துள்ளன. மற்ற உறுப்பு நாடுகள் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.