தந்தையையும் மகனையும் பிரிக்க தனிப்பட்ட முறையில் உத்தரவிட்ட பிரித்தானிய உள்துறைச் செயலர்: உருவாகியுள்ள எதிர்ப்பு
இங்கிலாந்தில் வாழ்ந்துவந்த வெளிநாட்டவர் ஒருவர் சுற்றுலா சென்ற நிலையில், அவரை மீண்டும் நாட்டுக்குள் அனுமதிக்கக்கூடாது என பிரித்தானிய உள்துறைச் செயலர் உத்தரவிட்டுள்ள விடயத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.
தந்தையையும் மகனையும் பிரிக்க தனிப்பட்ட முறையில் உத்தரவு
இங்கிலாந்தின் Chesterஇல் தனது 15 வயது முதல் குடும்பத்துடன் வாழ்ந்துவருபவர் Siyabonga Twala. கடந்த டிசம்பர் மாதம், தான் சிறுவயதில் வாழ்ந்த தென்னாப்பிரிக்கா எப்படி இருக்கும் என தன் மகனுக்குக் காட்ட Twala விரும்ப, அவரது முழுக் குடும்பமும் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுலா சென்றுள்ளது.
சுற்றுலா சென்றுவிட்டு மீண்டும் பிரித்தானியாவுக்குத் திரும்புவதற்காக இஸ்தான்புல் வந்தடைந்துள்ளது Twala குடும்பம்.
TUNAHAN TURHAN/GUARDIAN/EYEVINE
ஆனால், பிரித்தானியாவுக்குச் செல்லும் விமானத்தில் ஏற Twalaக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய உள்துறைச் செயலரான சுவெல்லா பிரேவர்மேன் தனிப்பட்ட முறையில் Twalaவை பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளதாக அவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, Twalaவின் மகன் பிரித்தானியாவிலிருக்க, Twala துருக்கியில் தனிமையில் வாடிவருகிறார். பிரித்தானியாவில் பிறந்த அவரது மகன், தனது 9ஆவது பிறந்தநாளை தன் தந்தை இல்லாமல் கடந்த வாரம் கொண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
FAMILY PHOTO
உருவாகியுள்ள எதிர்ப்பு
Twala பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படாததற்கு, அவர் 2018இல் செய்த குற்றச்செயல் ஒன்றைக் காரணமாக காட்டியுள்ளார் சுவெல்லா.
பிரித்தானியாவில் குடியிருப்பு அனுமதி பெற்றுள்ள Twala, குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவில்லை. 2018ஆம் ஆண்டு, விநியோகம் செய்யும் நோக்கத்துடன் கஞ்சா வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட Twalaவுக்கு ஒன்பது மாதங்கள் சிறைந்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் நான்கு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
FAMILY PHOTO
வெளிநாட்டவர் ஒருவர் 12 மாதங்கள் சிறைத்தண்டனை பெற்றிருந்தால் அவர் தானாகவே நாடுகடத்தப்படுவதற்கு விதி உள்ளது. ஆனால், Twala நான்கு மாதங்கள்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
ஆனாலும், அவரை நாட்டுக்குள் அனுமதிக்காமலிருப்பது பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் என்று கூறி தனிப்பட்ட முறையில் Twalaவை பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கக்கூடாது என சுவெல்லா உத்தரவிட்டுள்ளார்.
தந்தையையும் மகனையும் பிரித்த சுவெல்லாவின் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பிலுமிருந்து எதிர்ப்பு உருவாகியுள்ளது.
FAMILY PHOTO
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |