ஜேர்மனியின் வேலையின்மை விகிதம்: வெளியாகியுள்ள சமீபத்திய அறிக்கை
செப்டம்பரில் ஜேர்மனியில் வேலையின்மை விகிதம் 5.4% என்ற சதவீதத்தில் உள்ளது.
பருவகால அடிப்படையில் மாதந்தோறும் 14,000 என்ற நிலையில் வேலையின்மை அதிகரிப்பு.
ஜேர்மனியின் வேலையின்மை விகிதம் கடந்த ஜூலை மாதத்தை போலவே இந்த செப்டம்பர் மாதமும் 5.4 % என்ற நிலையில் நிற்பதாக Bundesagentur für Arbeit வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜேர்மனியின் வேலையில்லாதவர்களாக கருதப்படும் ஜேர்மன் குடிமக்களின் எண்ணிக்கை 5.5%-மாக இருந்த கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த மாதம் அதன் எண்ணிக்கை 62,000 குறைந்துள்ளது.
இந்த எண்ணிக்கையானது பருவகால அடிப்படையில் மாதந்தோறும் 14,000 என்ற நிலையில் அதிகரித்து வந்துள்ளது.
மொத்த வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை எதிர்பார்த்ததை விட 2,486,000 குறைவாக இருந்ததாக அறிக்கை தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு; இளவரசர் ஹரி மற்றும் மேகனின் ஆவணப்படம்: அரச குடும்பம் குறித்த கருத்துகளை நீக்க Netflix-க்கு அழுத்தம்
கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது, இந்த எண்ணிக்கை 0.8% அதிகரித்துள்ளது, இது கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்ததை விட 20,945 அதிகமான ஜேர்மன் குடிமக்கள் வேலையற்றவர்களாகக் கருதப்படுவதைக் குறிக்கிறது.