இளவரசர் ஹரி மற்றும் மேகனின் ஆவணப்படம்: அரச குடும்பம் குறித்த கருத்துகளை நீக்க Netflix-க்கு அழுத்தம்
ராணியின் மரணத்திற்குப் பிறகு ஆவணப்படத்தின் வெளியீட்டை அடுத்த ஆண்டு வரை தாமதப்படுத்த விரும்பும் ஹரி,மேகன் ஜோடி.
மன்னர் மூன்றாம் சார்லஸ்,கமீலா மற்றும் வேல்ஸ் இளவரசி கேட் ஆகியோர் தொடர்பான கருத்துகளை நீக்கவும் முயற்சி.
Netflix தளத்திற்காக உருவாக்கப்பட்ட இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் தொடர்பான ஆவணப் படத்தில் சில மாற்றங்களை செய்யவும், அதன் வெளியீட்டு திகதியை மாற்றி வைக்கவும் தி டியூக் மற்றும் டச்சஸ் ஆஃப் சசெக்ஸ் விரும்புவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அரச குடும்பத்துடன் சசெக்ஸின் இளவரசர் ஹரி மற்றும் இளவரசி மேகனுக்கும் முரண்பாடுகள் ஏற்பட்டதை தொடர்ந்து, அரச பதவிகளில் இருந்து இருவரும் விலகி அமெரிக்காவில் குடிபெயர்ந்தனர்.
ஆனால் ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவை தொடர்ந்து மீண்டும் அரச குடும்பத்துடன் ஹரி மற்றும் மேகன் ஜோடி இணைந்து பொதுவெளியில் தோன்றினர்.
இந்நிலையில் இளவரசர் ஹரி மற்றும் மேகன் ஜோடி Netflix ஸ்ட்ரீமிங் தளத்திற்காக 2020 ஆம் ஆண்டு பல மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள ஆவணப்படத்தில் ஒப்பந்தமாகி இருந்த நிலையில், அந்த ஆவணப்படத்தில் சில மாற்றங்களை செய்யவும், அதன் வெளியீட்டை அடுத்த ஆண்டிற்கு தள்ளிப்போடவும் தி டியூக் மற்றும் டச்சஸ் ஆஃப் சசெக்ஸ் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக ஆதாரம் வெளியிட்டுள்ள தகவலில், Netflix தயாரித்துள்ள இளவரசர் ஹரி மற்றும் மேகனின் ஆவண படத்தில் இருந்து மன்னர் மூன்றாம் சார்லஸ்,கமீலா மற்றும் வேல்ஸ் இளவரசி கேட் ஆகியோர் தொடர்பான கருத்துகளை நீக்கவோ அல்லது குறைக்கவோ சசெக்ஸ் தம்பதி விரும்புவதாக தெரிவித்துள்ளது.
மேலும் ராணியாரின் மறைவு துக்கம் தற்போது தான் நிறைவடைந்து இருப்பதால், ஆவணப்படத்தை அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடவும் Netflix நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்து வருவதாக தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், Netflix இல் ஒரு உயர்மட்ட ஆதாரம் வெளிப்படுத்தியது தகவலில் நெட்ஃபிக்ஸ் நிகழ்ச்சியை டிசம்பரில் ஸ்ட்ரீம் செய்யத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்யாவை விட்டு முடிந்தவரை வேகமாக வெளியேறுங்கள்: நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த இத்தாலி
ஆனால் இந்த நிகழ்ச்சி தொடர்பாக இளவரசர் ஹரி மற்றும் மேகனுடன் உறவு வைத்து இருக்கும் நெட்ஃபிக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி டெட் சரண்டோஸ்-க்க நிறைய அழுத்தம் கொடுக்க படுவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.