ரஷ்யாவை விட்டு முடிந்தவரை வேகமாக வெளியேறுங்கள்: நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த இத்தாலி
ரஷ்யாவில் இருந்து முடிந்தவரை வேகமாக வெளியேறுங்கள் நாட்டு மக்களுக்கு இத்தாலி உத்தரவு.
ரஷ்ய விமானங்களுக்கான வான்பரப்பை மூடும் ஐரோப்பாவின் தடை நீடிக்கப்படும் என தகவல்.
ரஷ்யாவில் தங்கி இருப்பது அத்தியாவசியம் இல்லை என்றால் உடனடியாக அந்த நாட்டை விட்டு வெளியேறுமாறு இத்தாலி தூதரகம் தங்கள் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் தாக்குதல் தொடங்கியதில் இருந்து பெரும்பாலான உலக நாடுகளுடனான தொடர்பை இழந்து ரஷ்யா தனிமையடைந்து வருகிறது.
மேலும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் அத்துமீறிய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஐரோப்பிய நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்ததுடன், ரஷ்ய விமானங்களுக்கான ஐரோப்பிய யூனியனின் வான் பரப்பையும் கடந்த பிப்ரவரி 27ம் திகதி முடியது.
இதன்மூலம் ரஷ்யாவில் இருந்து பிற நாடுகளுக்கு செல்லும் தனியார் விமானங்களின் டிக்கெட் விலை அதிகரித்து இருப்பதுடன், டிக்கெட்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது.
அத்துடன் தற்போது இந்த முடிவை ஐரோப்பிய யூனியன் நீட்டிப்பது தொடர்பாக முடிவு செய்ய இருப்பதாக தகவல் வெளிவந்துள்ள நிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இத்தாலிய தூதரகம் தங்கள் நாட்டு மக்களை அத்தியாவசியம் இல்லை என்றால் உடனடியாக ரஷ்யாவை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் ரஷ்யாவில் இருந்து வெளியேற நினைக்கும் இத்தாலிய மக்கள் உடனடியாக வணிக நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் தங்களது விமான டிக்கெட் இருப்புகளை முடிந்தவரை விரைவாக உறுதிப்படுத்தி கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.
AFP
இத்தாலிய தூதரகத்தின் இந்த அறிவிப்பினை போன்று, அமெரிக்கா, பல்கேரியா, போலந்து மற்றும் எஸ்டோனியா ஆகிய நாடுகள் தங்கள் குடிமக்களை ரஷ்யாவில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் செய்திகளுக்கு: ஆப்கானிஸ்தான் கல்வி மையத்தில் தற்கொலை படை தாக்குதல்: 19 பேர் பலி
உலக நாடுகளுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே உள்ள சிக்கல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ரஷ்யாவில் இருந்து வான் பயணங்களை மேற்கொள்வது சிரமமாகி வருவதால் உலக நாடுகள் தங்கள் நாட்டு மக்களை முடிந்தவரை ரஷ்யாவில் இருந்து வெளியேற அறிவுறுத்தி வருகின்றனர்.