ஆப்கானிஸ்தான் கல்வி மையத்தில் தற்கொலை படை தாக்குதல்: 19 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருந்த மாணவர்களுக்கு காத்திருந்த அபாயம்.
19 பேர் உயிரிழப்பு மற்றும் 27 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி.
ஆப்கானிஸ்தானில் உள்ள கல்வி மையத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் 19 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கல்வியியல் மையத்தில் வெள்ளிக்கிழமை காலை தற்கொலை படை நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 19 பேர் வரை உயிரிழந்து இருப்பதாகவும் 27 பேர் வரை படுகாயம் அடைந்து இருப்பதாகவும் பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் சிறுபான்மையினரான ஹசாரா சமூகத்தின் சியா முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் மேற்கு காபூலின் Dasht-e-Barchi பகுதிக்கு அருகில் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் தாக்குதல் தொடர்பாக காபூல் காவல்துறை செய்தித் தொடர்பாளர் Khalid Zadran, கல்வியியல் மையத்தில் மாணவர்கள் பல்கலைக்கழக தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த போது தற்கொலை படையின் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான தகவல் வெளியானதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மற்றும் மருத்துவமனைக்கு விரைந்து வந்த குடும்பத்தினரை தாலிபான் அதிகாரிகள் கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர்.
கூடுதல் செய்திகளுக்கு: விளாடிமிர் புடினை நிறுத்துங்கள்: ரஷ்யர்களுக்கு உக்ரைன் ஜனாதிபதி முக்கிய வேண்டுகோள்!
இது தொடர்பாக தாலிபான்கள் அளித்த தகவலில், மக்கள் கூடும் இடத்தில் மற்றொரு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படலாம் என கண்டறியப்பட்டு இருப்பதால் மக்களை உடனடியாக கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியதாக தெரிவித்தனர்.