தடை விதிக்கப்பட்ட ரஷ்ய நிறுவனத்திடம் எண்ணெய் வாங்க ஐரோப்பிய நாடொன்றிற்கு அனுமதி
அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட ரஷ்ய நிறுவனத்திடம் இருந்து எண்ணெய் வாங்க செர்பியா மூன்று மாத காலம் அனுமதி பெற்றுள்ளது.
ரஷ்ய எண்ணெய்
செர்பிய அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில், ரஷ்யாவின் Gazprom Neft மற்றும் Gazprom நிறுவனங்கள் இணைந்து NIS என்ற எண்ணெய் சுத்தீகரிப்பு நிறுவனத்தில் 56 சதவீத பங்குகளை கைவசம் வைத்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க கருவூலத்தின் வெளிநாட்டு சொத்து கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு ஒரு கோரிக்கையை அனுப்பியிருந்தது. அதில், NIS நிறுவனத்தின் கட்டுப்பாட்டை மூன்றாம் தரப்பினரிடம் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது.
மட்டுமின்றி, ஜனவரி மாதத்தில் Gazprom உள்ளிட்ட ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது ஏற்கனவே அமெரிக்க கருவூலத்தின் வெளிநாட்டு சொத்து கட்டுப்பாட்டு அலுவலகத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பல காரணங்களால் NIS நிறுவனத்தின் மீதான தடை அறிவிப்பை தள்ளி வைத்தே வந்துள்ளனர். இறுதியாக அக்டோபர் 8ம் திகதி NIS நிறுவனத்தின் மீதும் தடை விதிக்கப்பட்டது.
அமெரிக்க நிர்வாகம்
இந்த நிலையிலேயே NIS நிறுவனத்திடம் இருந்து எண்ணெய் வாங்குவது தொடர்பில் செர்பியா மூன்று மாதங்கள் விலக்கு பெற்றுள்ளது. முன்னதாக ரஷ்யாவின் Lukoil நிறுவனத்தின் வெளிநாடுகளின் உள்ள சொத்துக்களை விற்கும் பொருட்டு வெள்ளிக்கிழமை ட்ரம்ப் நிர்வாகம் அனுமதி அளித்தது.
ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களான Lukoil மற்றும் Rosneft மீது அக்டோபர் மாதம் அமெரிக்க நிர்வாகம் தடைகளை விதித்தது.

இந்த நிலையில், தடைகள் விதிக்கப்பட்டதிலிருந்து, உலகளாவிய எண்ணெய் உற்பத்தியில் சுமார் 0.5% பங்களிக்கும் அதன் வெளிநாட்டு சொத்துக்களில் Lukoil அதிகரித்து வரும் இடையூறுகளை எதிர்கொண்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |