செர்பியா Influencer-க்கு காட்டில் கிடைத்த கரடியுடனான திகில் அனுபவம்: வைரலாகும் வீடியோ
கரடி உடனான செர்பியா Influencer-யின் நேரடி சந்திப்பு இணையத்தில் வைரலாகி வருகிறது.
கரடி உடனான நேரடி சந்திப்பு
செர்பியா influencer ஸ்டெபன் ஜாங்கோவிச்(Stefan Jankovic), காட்டில் கரடியின் குகையை கண்டுபிடித்து நிலையில் திடீரென்று திகிலூட்டும் சூழ்நிலைக்கு ஆளானார்.
எதிர்பாராத விதமாக கண்டுபிடித்த கரடி குகையில், ஸ்டெபன் ஜாங்கோவிச் மிகப்பெரிய கரடி ஒன்றை நேருக்கு நேர் சந்தித்த காட்சிகள் பதிவு செய்யப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்ட நிலையில் அது வைரலாகியுள்ளது.
வீடியோவின் கீழ், "எனக்கு நடந்ததை நீங்கள் நம்ப மாட்டீர்கள். நான் 24 மணி நேரம் காட்டில் செலவழித்தேன், கரடி ஒன்றை என்னை நேருக்கு நேர் எதிர்கொண்டேன்” என தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் வெளியான வீடியோ
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட இரண்டு திகிலூட்டும் கிளிப்புகளில், ஜாங்கோவிச் கரடியுடன் நெருக்கமான சந்திப்பை ஆவணப்படுத்தியுள்ளார்.
முதல் வீடியோ, அவர் குகையில் அமர்ந்து, கரடி அணுகும்போது அதைப் பார்க்கும் காட்சியைக் காட்டுகிறது.
மேலும் அதில், influencer, கரடியை தூண்டாத வகையில் குகையிலிருந்து மெதுவாக வெளியேறுகிறார்.
இரண்டாவது வீடியோவில், ஜாங்கோவிச் கரடியின் அருகில் குகையிலிருந்து வெளியேறுவதை காணலாம்.
அத்துடன் ஆர்வமுள்ள கரடி தலையையும் செல்போனையும் மோப்பமிடுகிறது, எதிர்பாராத விருந்தாளியால் குழப்பமடைகிறது.
பின்னர் influencer மரத்தில் ஏறிய நிலையில், கீழே இரண்டு கரடிகள் அதை பார்த்துக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |