சமையலறையில் புதைக்கப்பட்டிருந்த சடலங்கள்... வாடகை வீட்டில் குடியிருந்த நபரின் பகீர் பின்னணி
ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் ஒரு வீட்டின் சமையலறையில் புதைக்கப்பட்டிருந்த சடலங்களால் அந்த குடியிருப்பின் வாடகைதாரர் கைதாகியுள்ளார்.
கொலைகள் அம்பலம்
ருவாண்டாவின் Kicukiro கிராமப் பகுதியிலேயே குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. வாடகைக்கு குடியிருந்த வீட்டில் இருந்து அந்த நபரை வெளியேற்றிய நிலையிலேயே தொடர்புடைய கொலைகள் அம்பலமாகியுள்ளது.
@bbc
அந்த நபர் பல மாதங்களாக வாடகை செலுத்த தவறியதை அடுத்து, வீட்டின் உரிமையாளர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார். மீட்கப்பட்ட சடலங்கள் அனைத்தும் பாலியல் தொழிலாளர்கள் என்றே முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், இதில் பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் சிக்கிக்கொண்டுள்ளனர். பொதுவாக ருவாண்டாவில் படுகொலை சம்பவங்கள் அரிதாகவே நடக்கும் என்பதால், இந்த வழக்கு ஒட்டு மொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது.
பாலியல் தொழிலாளர்கள்
வீட்டின் உரிமையாளர்கள் புகாரை ஏற்று திங்களன்று அதிகாரிகள் அவரை வெளியேற்றச் சென்றபோது அந்த நபர் சண்டையிட்டார் என்றே கூறப்படுகிறது. மேலும், வீட்டில் இருந்து வெளியேற மறுத்ததுடன், மன்னிப்புக் கோரியதும் தேவையின்றி அழுததும் பொலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
@bbc
இதனையடுத்து, விசாரிக்கும் பொருட்டு அவரை காவல் நிலையம் அழைத்து சென்ற நிலையில், அதிகாரிகளிடம் சில கொலைகள் செய்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து, அவரது வீட்டின் சமையலறையில் தோண்டிய அதிகாரிகள் 10 சடலங்களை மீட்டுள்ளனர்.
பெரும்பாலும் பாலியல் தொழிலாளர்களை குடியிருப்புக்கு அழைத்து வந்து, அவர்களின் அலைபேசி மற்றும் பொருட்களை கொள்ளையிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
மட்டுமின்றி, அவர்களை கழுத்தை நெரித்து கொலை செய்து சமையலறையில் புதைத்துள்ளார். அவர் மீது இதுவரை வழக்கு ஏதும் பதியப்படவில்லை எனவும், விசாரணைக்கு பின்னரே பதியப்படும் எனவும் பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |