விளையாட்டாக மருத்துவமனை நோயாளிகளை அடுத்தடுத்து கொலை செய்த நர்ஸ்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மருத்துவமனை நோயாளிகள் நால்வரை வேண்டுமென்றே கொலை செய்த வழக்கில் நர்ஸ் ஒருவர் மரண தண்டனையை எதிர்கொண்டு வருகிறார்.
டெக்சாஸ் மாகாணத்தில் Hallsville பகுதியை சேர்ந்த 37 வயது வில்லியம் டேவிஸ் என்பவரே கொலை வழக்கில் சிக்கியவர். கொலை செய்யப்பட்ட அனைவரும் ஜூன் 2017 மற்றும் ஜனவரி 2018 க்கு இடையில் இதய அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அந்த நோயாளிகள் நால்வரின் தமனியில் டேவிஸ் ஊசியின் மூலம் காற்றை நிரப்பியதாக கூறப்படுகிறது. கொலை செய்வதை விளையாட்டாக கருதியதாலையே, டேவிஸ் அந்த நோயாளிகள் மீது இரக்கம் காட்டவில்லை என இந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், அந்த நால்வரும் இறப்பதை டேவிஸ் கண்டு ரசித்துள்ளதாகவும், அவர் அதை ஒரு போதையாகவே எண்ணிக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் டேவிஸ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
டேவிஸ் டைலரில் உள்ள கிறிஸ்டஸ் டிரினிட்டி அன்னை பிரான்சிஸ் லூயிஸ் மற்றும் பீச் ஓவன் ஹார்ட் ஹாஸ்பிடலில் செவிலியராக செயல்பட்டு வந்தார். இந்த மருத்துவமனையிலேயே நால்வர் மர்மமான முறையில் இறந்ததுடன், அதற்கு காரணம் டேவிஸ் எனவும் தெரிய வந்தது.
அமெரிக்காவில் அருங்கொலை செய்தவர்கள் பிணை அளிக்கப்படாமல் ஆயுள் முழுவதும் சிறை வைக்கப்படுவார்கள் அல்லது மரண தண்டனை விதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது