தொடர் மரணம்... செவிலியரின் கொடுஞ்செயல்: நீதிமன்றம் அளித்த முக்கிய தீர்ப்பு
அமெரிக்காவில் இருதய நோயாளிகளை விசித்திரமான முறையில் கொலை செய்து சிக்கிய செவிலியருக்கு மரண தண்டனை விதிக்கப்ப்ட்டுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மருத்துவமனை ஒன்றில் இருதய நோயாளிகளின் இருதய நாளங்களில் காற்றை நிரப்பி செவிலியர் ஒருவர் தொடர் கொலைகளை முன்னெடுத்து வந்தார்.
2017 மற்றும் 2018ல் டெக்சாஸின் டைலரில் உள்ள கிறிஸ்துஸ் டிரினிட்டி மதர் பிரான்சிஸ் மருத்துவமனையில் இருதய நோயாளிகள் நால்வர் மர்மமான முறையில் மரணமடைந்தனர்.
முதலில் இந்த விவகாரம் அங்குள்ள மருத்துவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இருதய நோயாளிகள் நால்வரும் உடல்நலம் தேறி வந்த நிலையில் திடீரென்று மரணமடைந்துள்ளது மருத்துவர்களை மட்டுமின்றி நோயாளிகளின் குடும்பத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதனிடையே, குறித்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுத்த அதிகாரிகள், 37 வயதான வில்லியம் ஜார்ஜ் டேவிஸ் என்ற செவிலியரே குறித்த மரணங்களுக்கு காரணம் என கண்டறிந்தனர்.
குறித்த நபர் அந்த நான்கு இருதய நோயாளிகளின் இதய நாளங்களில் காற்றை நிரப்பியுள்ளது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து நீதிமன்ற விசாரணையில் அவர் குற்றவாளி என நிரூபணமானது. தொடர்ந்து அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.