வெறும் 10 நிமிடத்தில் செட் தோசை செய்வது எப்படி?
பொதுவாகவே காலை உணவாக தோசை மற்றும் இட்லி இருந்தால் பலரும் விரும்பி சாப்பிடுவது வழக்கம்.
அதிலும் தோசையை விதமான சுவையில் சாப்பிடுவது என்றால் சிறியவர்களுக்கு அதிக ஆசை இருக்கும்.
அந்தவகையில் அனைவருக்கும் பிடித்த செட் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சரிசி - 1 கப் (250 கிராம்)
- உளுந்து - 1/4 கப்
- வெந்தயம் - 1 தேக்கரண்டி
- தண்ணீர் அவல் - 1/4 கப் (125 கிராம்)
- உப்பு - 1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- உப்பு - 1/2 தேக்கரண்டி
- நெய்
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் பச்சரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து நன்றாக கழுவி தண்ணீர் ஊற்றி 3 மணிநேரம் ஊறவைக்கவும்.
2. அடுத்து பாத்திரத்தில் அவல் சேர்த்து நன்றாக கழுவி தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊறவைக்கவும்.
3. பின்பு ஊறவைத்த பொருட்களை மிக்சியில் சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும்.
4. அரைத்த மாவுடன் உப்பு சேர்த்து நன்கு கலந்து விட்டு 8 மணிநேரம் புளிக்க வைக்கவும்.
5. புளித்த மாவுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும்.
6. அடுத்து தோசை கல்லை சூடாக்கி மாவை சேர்த்து சுற்றிலும் நெய் ஊற்றி மூடி வைத்து 40 நொடிகள் வேகவிடவும்.
7. பின்பு திருப்பி விட்டு 20 நொடிகள் வேகவிட்டு எடுத்தால் சுவயான செட் தோசை தயார்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |