உக்ரைனில் 7வது தளபதியை இழந்த ரஷ்யா: நெருக்கடியில் விளாடிமிர் புடின்
விளாடிமிர் புடினின் இராணுவத்திற்கு மற்றொரு பேரிடியாக போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யா தமது ஏழாவது படைத்தலைவரை இழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான Kharkiv-ல் கொடூர தாக்குதலை முன்னெடுத்து வந்துள்ளனர் ரஷ்யாவின் Denis Kurilo தலைமையிலான துருப்புகள்.
இந்த நிலையில், Denis Kurilo-வின் புகைப்படத்தை வெளியிட்ட உக்ரைன் தரப்பு, அவர் கொல்லப்பட்டுள்ளதாக உறுதி செய்துள்ளனர். பிப்ரவரி 24ம் திகதி உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை தொடங்கிய பின்னர், தமது 7வது படைத்தலைவரை இழந்துள்ளார் விளாடிமிர் புடின்.
மேலும், Denis Kurilo தலைமையிலான படைப்பிரிவு, கிழக்கு உக்ரைனில் கடும் இழப்புகளை எதிர்கொண்டதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1,500 வீரர்கள் வரையில் கிழக்கு உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் இழந்திருக்கலாம் என்றே கூறப்படுகிறது. 1980 களில் ஆப்கானிஸ்தானில் 10 ஆண்டுகால கொடூரமான போரின் போது சோவியத் யூனியன் ஐந்து தளபதிகளை மட்டுமே இழந்தது.
மார்ச் 29 வரையான தரவுகளின் அடிப்படையில், ரஷ்ய துருப்புகள் 17,200 பேர்கள் உக்ரைனில் கொல்லப்பட்டுள்ளதாகவும், பல ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.