பாதசாரிகள் கூட்டத்துக்குள் பாய்ந்த கார்: ஜேர்மன் தலைநகரில் பலர் காயம்
ஜேர்மன் தலைநகர் பெர்லினில் பாதசாரிகள் கூட்டத்துக்குள் கார் ஒன்று பாய்ந்ததில் பலர் காயமடைந்துள்ளார்கள்.
ஜேர்மன் தலைநகரில் நிகழ்ந்த துயர சம்பவம்
நேற்று வியாழக்கிழமை, பெர்லினில் பாதசாரிகள் கூட்டத்துக்குள் கார் ஒன்று பாய்ந்ததில் சிறுவர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளதாக பெர்லின் தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.
சிறுவர்களுடன் வந்த பெரியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக ராய்ச்சர்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே மார்ச் மாதம் மேற்கு ஜேர்மனியிலுள்ள Mannheim நகரில் பாதசாரிகள் கூட்டத்துக்குள் கார் ஒன்று பாய்ந்ததில் இருவர் கொல்லப்பட்டார்கள், பலர் காயமடைந்தார்கள்.
அதேபோல, பிப்ரவரி மாதம், மியூனிக் நகரில் பாதசாரிகள் கூட்டத்தின்மீது ஒருவர் காரை மோதியதில் சுமார் 28 பேர் காயமடைந்தார்கள்.
கடந்த டிசம்பரில், சவுதி அரேபியரான மருத்துவர் ஒருவர் Magdeburgஇல் அமைக்கப்பட்ட கிறிஸ்துமஸ் சந்தை ஒன்றில், மக்கள் கூட்டத்துக்குள் வேண்டுமென்றே காரைக் கொண்டு மோதியதில் ஒரு குழந்தை உட்பட ஐந்துபேர் கொல்லப்பட்டார்கள், 200க்கும் அதிகமானோர் காயமடைந்தார்கள்.
என்றாலும், நேற்று நிகழ்ந்த கார் மோதல் சம்பவம், விபத்து என கூறப்படுகிறது. பொலிசார் அந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |