வரலாறு காணாத மழை... வெள்ளக்காடான நியூயார்க் நகரம்! அவசர நிலை பிரகடனம்: வெளியான பரபரப்பு காட்சிகள்
Ida புயல் தாக்கியதின் விளைவாக வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
நிலைமை குறித்து நியூயார்க் நகர மேயர் Bill de Blasio ட்விட்டரில் அறிவத்ததாவது, நான் இன்று இரவு நியூயார்க் நகரில் அவசர நிலையை அறிவிக்கிறேன்.
நகரம் முழுவதும் கடும் மழை, பயங்கரமான வெள்ளம் மற்றும் சாலைகளில் ஆபத்தான நிலைமைகள் என இன்றிரவு ஒரு வரலாறு காணாத வானிலை நிகழ்வை நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
தயவுசெய்து இன்று இரவு வீதிகளிலிருந்து விலகி இருங்கள், முதலில் அவசர சேவைகள் தங்கள் வேலையைச் செய்யட்டும்.
நீங்கள் வெளியே செல்ல நினைத்தால், வேண்டாம். சுரங்கப்பாதைகளில் இருந்து விலகி இருங்கள். சாலைகளிலிருந்து விலகி இருங்கள். இந்த பயங்கர வெள்ளத்தில் செல்ல வேண்டாம். வீட்டிற்குள்ளே இருங்கள்.
மின் சேவைகளை கண்காணித்து வருகிறோம். மின்சாரம் இல்லாமல் சுமார் 5,300 வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.
அடுத்த சில மணிநேரங்களில் மழை நிற்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால் அதுவரை வீட்டிற்குள்ளே இருங்கள் என Bill de Blasio அறிவுறுத்தியுள்ளார்.
NYC Floods ? Multiple homes flooded in New York City. This one’s in Brooklyn
— Insider Paper (@TheInsiderPaper) September 2, 2021
pic.twitter.com/yxnhT9trAS
Ida புயலால் நியூயார்க் நகரில் உள்ள சாலைகள், சுரங்கப்பாதைகள், சுரங்க ரயில் நிலையங்கள் என அனைத்து நீரில் மூழ்கியுள்ளன. இதனால், போக்குவரத்து முடங்கியுள்ளது.
ALERT ? Vehicles literally floating in flood water in Queens, New York City pic.twitter.com/Xd99tYWrE0
— Insider Paper (@TheInsiderPaper) September 2, 2021
நகரில் உள்ள பல வீடுகள், வணிகங்களில் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நியூயார்க் நகரில் ஒரு மணிநேரத்தில் சுமார் 8 செ.மீ மழை பொழிந்துள்ளதாக தேசிய வானிலை சேவை தெரிவித்துள்ளது.
Flooding ? Check water level in Staten Island, NYC pic.twitter.com/7mkocw3YI1
— Insider Paper (@TheInsiderPaper) September 2, 2021
JUST IN ? All subway services in New York city suspended due to severe flooding pic.twitter.com/00p4BR4Alu
— Insider Paper (@TheInsiderPaper) September 2, 2021
BREAKING ? Catastrophic situation in New York City after flooding. This is 28th street, NYC
— Insider Paper (@TheInsiderPaper) September 2, 2021
pic.twitter.com/NRnOiMepwd
?#BREAKING Shocking video shows flood waters ripping through apartments in New York City
— R A W S A L E R T S (@rawsalerts) September 2, 2021
?#Manhattan I #NYC
Reports of catastrophic flash flooding happening across in New Jersey and New York City as millions of people brace for this devastating floods pic.twitter.com/0Y2170sgKo