பிரித்தானியாவுக்கு படகுகள் மூலம் வரும் புலம்பெயர்வோருக்கு கடும் தண்டனை: அவுஸ்திரேலியாவைப் போன்றதொரு நடவடிக்கைக்கு உள்துறைச் செயலர் திட்டம்...

Immigration United Kingdom
By Balamanuvelan Oct 04, 2022 06:45 AM GMT
Report

முந்தைய பிரித்தானிய உள்துறைச் செயலர் பிரீத்தி பட்டேலைப்போலவே, புதிய உள்துறைச் செயலரான சுவெல்லாவும் சட்ட விரோத புலம்பெயர்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு வருகிறார்.

அவ்வகையில், ஆங்கிலக் கால்வாயை சிறு படகுகள் மூலம் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோருக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் அல்லது அவர்கள் நாடுகடத்தப்படலாம்.

அவுஸ்திரேலியாவுக்கு சிறு படகுகளில் வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை அந்நாடு சிறையிலடைப்பதைப் போல, பிரித்தானியாவும் நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறது.

பிரித்தானியாவில் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பதவி விலகியதைத் தொடர்ந்து பல அமைச்சர்கள் புதிதாக பொறுப்பேற்றனர்.

பிரித்தானியாவுக்கு படகுகள் மூலம் வரும் புலம்பெயர்வோருக்கு கடும் தண்டனை: அவுஸ்திரேலியாவைப் போன்றதொரு நடவடிக்கைக்கு உள்துறைச் செயலர் திட்டம்... | Severe Punishment For Migrants

Credit: Steve Finn

உள்துறைச் செயலராக இருந்த பிரீத்தி பட்டேல் பதவி விலகியதைத் தொடர்ந்து, அவருக்கு பதிலாக சுவெல்லா பிரேவர்மேன் புதிய உள்துறைச் செயலராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

உள்துறைச் செயலர்தான் மாறினாரேயொழிய, புலம்பெயர்தல் குறித்த பிரித்தானியாவின் பார்வை மாறவில்லை.

அவரும் இப்போது புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைத் துவங்க, அல்லது, தொடர இருக்கிறார் என்று கூட கூறலாம்.

அவ்வகையில், இனி ஆங்கிலக் கால்வாயை சிறு படகுகள் மூலம் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோருக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் அல்லது அவர்கள் நாடுகடத்தப்படலாம்.

இதற்கு முன், கடந்த ஜூன் மாதத்திலேயே சிறு படகுகளில் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைவது சட்ட விரோதம் என சட்டம் இயற்றப்பட்டது.

ஆனாலும், அதிகாரிகள் கடத்தல்காரர்களைத்தான் குறிவைத்தார்கள். ஆனால், புதிய உள்துறைச் செயலரான சுவெல்லாவோ, சட்ட விரோத புலம்பெயர்வோர் மீதும் கவனம் செலுத்த உள்ளார். ஆக, பிரித்தானியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைவோருக்கு இனி சிறை அல்லது நாடுகடத்தல் தண்டனையாக வழங்கப்படக்கூடும்.

அத்துடன், கடத்தல்காரர்கள் வாழ்நாள் முழுவதும் சிறையில் செலவிடும் வகையில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  

5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இறம்பைக்குளம், Franconville, France

18 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US