ஊரடங்கில் ஏற்பட்ட கடனை அடைக்க பாலியல் தொழிலாளி செய்த காரியம்! என்ன தண்டனை தெரியுமா?
கொரோனா ஊரடங்கின்போது ஏற்பட்ட கடனை அடைப்பதற்காக பாலியல் தொழிலாளி ஒருவர் பிரேசில் நாட்டிலிருந்து பிரித்தானியாவுக்கு 1.2 கிலோ போதைப் பொருளைக் கடத்திய வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த Luan Irving Dos Santos Monteiro (31) எனும் பாலியல் தொழிலாளி கடந்த டிசமபர் மாதம் கிறிஸ்துமஸ் தினத்தன்று மாலை பிரித்தானியாவின் Heathrow விமான நிலையத்தில் எல்லைப்பாதுகாப்பு படை அதிகாரிகளால் கைது செய்யபட்டார்.
அவரது வயிற்றுக்குள் போதை பொருள் இருப்பதை கண்டறிந்து அவரை அதிகாரிகள் ஸ்கேன் செய்தனர்.
அதில், அவர் சுமார் 1.2 கிலோ கொக்கைன் போதை பொருளை, 101 சிறிய பொட்டலங்களாக கட்டி விழுங்கி வயிற்றில் சேமித்து வைத்துள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் பிரேசிலிலிருந்து புறப்படுவதற்கு 11 மணி நேரத்துக்கு முன்னதாக அவற்றை விழுங்கியுள்ளார். அதில் ஒரே ஒரு பொட்டலம் உடைந்திருந்தால் கூட அவருக்கு மரணம் நிச்சயம் எனக் கூறப்படுகிறது.
மேலும், அவர் கடத்த முயன்ற கோக்கைன் அளவின் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட 100,000 பவுண்டு எனக் கூறப்படுகிறது.
இதனை பிரித்தானியாவுக்குள் கடந்த முயன்றபோது தான், அவரை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. முதலில் Monteiroவின் வழக்கறிஞர் அவருக்கு சாதகமாக வாதிட்டலும், பின்னர் அவரே தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இந்த கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் வாழ்க்கையை நடந்த கஷ்டப்பட்டதாகவும், அதிக கடனில் மாட்டிக்கொண்டதாகவும் கூறிய Monteiro, இந்த போதைப் பொருளை வெற்றிகரமாக கடத்தினால் தனக்கு 2000 பவுண்டு பணம் கிடைத்திருக்கும் என்றும் அதனை வைத்து கடனை அடைக்கலாம் என்று வேறு வழியில்லாமல் இதை செய்ததாகவும் அவர் வாக்குமூலம் கொடுத்தார்.
இந்த வழக்கில் அவருக்கு 4 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதில் அவர் பாதி தண்டனைக் காலத்தை பிரித்தானிய சிறையிலும், மீதமுள்ள காலத்தில் பிரேசிலில் ஒப்படைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
