ஏழு வயது சிறுவன் மீது வன்புணர்வுக் குற்றச்சாட்டு... திடுக்கிடவைத்துள்ள ஒரு செய்தி
ஏழு வயது சிறுவன் ஒருவன் மீது நியூயார்க் பொலிசார் வன்புணர்வுக் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ள விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபர் சிறுவன் என்பதால், அவன் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இதற்கிடையில், Queens பகுதியைச் சேர்ந்த சட்டத்தரணியான Anthony Martone என்பவர், ஒரு ஏழு வயது சிறுவன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்துள்ள அதிகாரிகளை வன்மையாக கண்டித்துள்ளார்.
ஒரு ஏழு வயது குழந்தைக்கு தன என்ன செய்கிறேன் என்றே தெரியாது, அப்படியிருக்கும்பட்சத்தில், ஒரு ஏழு வயது குழந்தை மீது வன்புணர்வுக் குற்றம் சாட்டுவது அபத்தம் ஆகும்.
உண்மையாகவே அந்த சிறுவன் அதைச் செய்தான் என்பதை குற்றம் சாட்டியவர்கள் நிரூபிக்கவேண்டியிருக்கும். என்னைப் பொருத்தவரை அது சாத்தியமேயில்லை என்கிறார் Anthony.
அமெரிக்காவைப் பொருத்தவரை, நியூயார்க் சட்டப்படி ஏழு வயது சிறுவர்களைக் கூட கைது செய்யவும் முடியும், அவர்களை சிறார் குற்றவாளிகளாக விசாரணைக்கு உட்படுத்தவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
