லண்டனில் நள்ளிரவு தனியாக சென்ற இளம்பெண்ணை பின் தொடர்ந்து பாலியல் தாக்குதல் நடத்திய நபர்! புகைப்படத்துடன் முக்கிய தகவல்
லண்டனில் நள்ளிரவு 2.35 மணியளவில் இளம்பெண்ணை பின் தொடர்ந்து வந்த நபர் அவர் மீது பாலியல் ரீதியான தாக்குதல் நடத்தியது தொடர்பாக பொலிசார் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர்.
லண்டனின் கிங்ஸ் கிராஸில் உள்ள நண்பரை கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி சந்தித்த 20களில் உள்ள இளம்பெண் நள்ளிரவு 2.35 மணிக்கு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை மர்ம நபர் பின் தொடர்ந்து வருவதை உணர்ந்து வேகமாக நடக்க தொடங்கினார். ஆனால் அப்பெண்ணை நெருங்கிய அந்த நபர் அவர் மீது இருமுறை பாலியல் ரீதியான தாக்குதலை நடத்தியுள்ளான்.
பின்னர் அங்கிருந்து தப்பிய அப்பெண் பொலிசில் சென்று புகார் கொடுத்திருக்கிறார்.
இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் நிலையில் இதில் தொடர்புடைய நபரின் சிசிடிவி புகைப்படத்தை பொலிசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.
ஏற்கனவே அவர் புகைப்படம் கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்ட நிலையில் மீண்டும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த நபர் வேறுநாட்டை சேர்ந்தவர் என்றும் இத்தாலியராக இருக்கலாம் எனவும் பொலிசார் கூறியுள்ளார்.
அவரை யாருக்கேனும் அடையாளம் தெரிந்தால் தங்களிடம் உடனடியாக தெரிவிக்கலாம் எனவும் பொலிசார் கூறியுள்ளனர்.
