இது உண்மையில்லை! இலங்கை எம்.பி.சரத் பொன்சேகா திட்டவட்டமாக மறுப்பு
‘கோட்டா கே கம’போராட்டகாரர்களுடன் ஆலோசிக்காமல் ராஜபக்ச அரசாங்கத்தால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் ஒருபோதும் ஈடுபடமாட்டுன் என சமகி ஜன பலவேகயா கட்சி எம்.பி. சரத் பொன்சேகா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பிரதமர் பதவியை வழங்குவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சமகி ஜன பலவேகயா எம்.பி. சரத் பொன்சேகாவை தொடர்பு கொண்டு பேசியதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், அதிபர் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் தான் பதவி ஏற்கப்போவதாக வெளியான செய்தியை சமகி ஜன பலவேகயா (SJB) எம்.பி. சரத் பொன்சேகா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச எங்கே இருக்கிறார்? உண்மையை உடைத்த இலங்கை பாதுகாப்பு செயலாளர்
இலங்கை மக்களின் கோரிக்கைகளுக்கு, குறிப்பாக காலி முகத்திடலில் நாட்டிற்காக குரல் கொடுத்து வருபவர்களின் கோரிக்கைகளுக்கு அவர் மிகவும் உணர்ச்சி கொண்டுள்ளதாக சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
புதிய பிரதமராக தான் நியமிக்கப்பட உள்ளதாக வெளியான செய்திகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள எம்.பி.பொன்சேகா, கோட்டா கோ கம' தளத்தில் போராட்டம் நடத்துவோரை கலந்தாலோசிக்காமல், ராஜபக்ச நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் தாம் ஒருபோதும் ஈடுபட போவதில்லை என தெரிவித்துள்ளார்.