CPL T20: 47 வயது கேப்டன் இம்ரான் தாஹிரின்..அணியை நொறுக்கிய பாகிஸ்தான் வீரர்கள்
Antigua and barbuda falcons won by 65 runs: CPL டி20 போட்டியில் ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் அணி 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ப்ரொவிடென்ஸ் மைதானத்தில் நடந்த CPL டி20 போட்டியில், கயானா அமேசான் வாரியர்ஸ் அணியை 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் வீழ்த்தியது.
ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் 182 ஓட்டங்கள்
ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகளுக்கு இடையிலான CPL டி20 போட்டி ப்ரொவிடென்ஸ் மைதானத்தில் நடந்தது.
முதலில் ஆடிய ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ஓட்டங்கள் குவித்தது.
அதிரடியில் மிரட்டிய பாகிஸ்தானின் ஹசன் நவாஸ் 36 ஓட்டங்களும், ஷதாப் கான் 30 ஓட்டங்களும் விளாசினர்.

சுருண்ட கயானா
பின்னர் ஆடிய கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 14.2 ஓவர்களில் 117 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக தின்ட்யால் 25 (13) ஓட்டங்களும், மொஹம்மது நபி 23 (22) ஓட்டங்களும் எடுத்தனர்.
அல்ஸாரி ஜோசப் 4 விக்கெட்டுகளும், ஜோஷுவா ஜேம்ஸ், ஷதாப் கான் மற்றும் சுபியன் மோகிம் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
9 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 30 ஓட்டங்கள் விளாசியும், 2 விக்கெட்டுகளும் வீழ்த்திய ஷதாப் கான் (Shadab Khan) ஆட்டநாயகன் விருது பெற்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |