நிக்கோலஸ் பூரனின் அதிரடி வீண்: வாணவேடிக்கை காட்டிய பாகிஸ்தான் வீரர்
Antigua and Barbuda won by 5 wickets: கரீபியன் டி20 போட்டியில், ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.
நார்த் சவுண்டில் நடந்த கரீபியன் டி20 போட்டியில், ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நிக்கோலஸ் பூரன் 43
ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நார்த் சவுண்டின் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடந்தது.
முதலில் ஆடிய ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ஓட்டங்கள் எடுத்தது.
கோலின் முன்ரோ 46 (33) ஓட்டங்களும், நிக்கோலஸ் பூரன் 17 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 43 ஓட்டங்களும் விளாசினர்.
ஷதாப் கான் வாணவேடிக்கை
கார்ன்வால், ஜோஷுவா தலா 2 விக்கெட்டுகளும், ஷாமர் மற்றும் ஷதாப் கான் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் அணி 18.3 ஓவர்களில் 168 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஷதாப் கான் (Shadab Khan) 20 பந்துகளில் 5 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்கள் விளாசினார். குசல் பெரேரா 24 பந்துகளில் 34 ஓட்டங்கள் விளாசினார்.


| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |