பிக் பாஷ் 2025: ஷதாப் கானின் மிரட்டலில் சரிந்த பிரிஸ்பேன் ஹீட்! வார்னரின் படை அபார வெற்றி
பிக் பாஷ் லீக் போட்டியில் சிட்னி தண்டர் அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட்டை வீழ்த்தியது.
சாம் கோன்ஸ்டஸ்
மனுகா ஓவல் மைதானத்தில் நடந்த போட்டியில் சிட்னி தண்டர் அணி முதலில் துடுப்பாடியது.
Reverse lap? Reverse scoop? Reverse malachi? 😂
— KFC Big Bash League (@BBL) December 22, 2025
Call it what you want, Sam Konstas has hit this to the rope! #BBL15 pic.twitter.com/3Rh9785dZR
சாம் கோன்ஸ்டஸ் 63 (45) ஓட்டங்களும், மேத்யூ கில்ஸ் 76 (48) ஓட்டங்களும் விளாச சிட்னி தண்டர் அணி 193 ஓட்டங்கள் குவித்தது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அணித்தலைவர் டேவிட் வார்னர் (David Warner) 7 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் அணி சீரான இடைவெளியில் ஷதாப் கான் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தது.
அபார வெற்றி
மேட் ரென்ஷா 43 (28) ஓட்டங்களும், ஹூக் வெய்ப்கென் 30 (26) ஓட்டங்களும் எடுக்க பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவர்களில் 159 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் சிட்னி தண்டர் அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மிரட்டலாக பந்துவீசிய ஷதாப் கான் (Shadab Khan) 4 விக்கெட்டுகளும், டேனியல் சாம்ஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
S H A D A B 🤩
— KFC Big Bash League (@BBL) December 22, 2025
The Pakistan allrounder is having some sort of match! #BBL15 pic.twitter.com/LGRt68AlzD
48 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 76 ஓட்டங்கள் விளாசிய மேத்யூ கில்க்ஸ் (Matthew Gilkes) ஆட்டநாயகன் விருது பெற்றார். 

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |