Pandora Papers... கசிந்த ஆவணங்களில் ரஷ்ய ஜனாதிபதி புடினின் ரகசிய காதலி பெயர்
ரஷ்ய ஜனாதிபதி புடினின் ரகசிய காதலிக்கு வெளிநாடுகளில் மில்லியன் கணக்கிலான சொத்துக்கள் இருப்பதாக Pandora Papers ஆவணங்கள் அம்பலப்படுத்தியுள்ளது.
உலகின் முக்கிய அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், நிறுவன அதிபர்கள் உட்பட பலரது சட்டவிரோத சொத்துக்குவிப்பு ரகசியங்கள் Pandora Papers என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.
இந்த ஆவணங்களில் ரஷ்ய ஜனாதிபதி புடினின் ரகசிய காதலி 46 வயதான Svetlana Krivonogikh என்பவரது பெயரும் இடம்பெற்றுள்ளது. இவருக்கு வெளிநாடுகளில் 100 மில்லியன் டொலர் அளவுக்கு சொத்துக்கள் இருப்பதாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் துணை மேயராக இருந்த காலகட்டம் முதலே, இவருக்கும் ஜனாதிபதி புடினுக்கும் நெருக்கமான உறவு இருந்து வந்துள்ளது. மேலும் இந்த தம்பதிக்கு மகள் ஒருவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மிகவும் சாதாரண குடும்ப பின்னணி கொண்ட இவர், திடீரென்று சொகுசு பங்களாவில் குடியேறியதும், தனிப்பட்ட பயன்பாட்டுக்காக பாய்மர படகு வாங்கியதும் பரவலாக பேசப்பட்டது.
2003ல் தனியார் நிறுவனம் ஒன்று ஆடம்பர பங்களா ஒன்றை இவருக்கு பரிசளித்துள்ளது. தொடர்ந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் சொகுசு குடியிருப்பு ஒன்றை இவர் வாங்கியதுடன், ஆடம்பர பொருட்கள் பலவற்றையும் சொந்தமாக்கியதாக தற்போது கசிந்துள்ள ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.