34 பந்துகள் 69 ஓட்டங்கள்! ருத்ர தாண்டவமாடிய ஷபாலி..இலங்கையை வீழ்த்திய இந்திய அணி
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
சமரி அதப்பத்து அதிரடி
இந்தியா, இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்தது.

முதலில் ஆடிய இலங்கை அணியில் சமரி அதப்பத்து (Chamari Athapaththu) 24 பந்துகளில் 31 ஓட்டங்கள் (2 sixer, 3 பவுண்டரிகள்) விளாசினார்.
பின்னர் ஹர்ஷிதா 33 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஏனைய வீராங்கனைகள் சொதப்ப இலங்கை அணி 128 ஓட்டங்கள் எடுத்தது. வைஷ்ணவி, ஸ்ரீசரணி தலா 2 விக்கெட்டுகளும், கிராந்தி மற்றும் ஸ்நேஹ் ராணா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
ஷபாலி வெர்மா ருத்ர தாண்டவம்
அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஸ்ம்ரிதி மந்தனா 14 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ஷபாலி வெர்மா அதிரடியில் மிரட்டினார்.

இதன்மூலம், இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 11.5 ஓவரிலேயே 129 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஷபாலி வெர்மா (Shafali Verma) ஆட்டமிழக்காமல் 34 பந்துகளில் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 69 ஓட்டங்கள் விளாசினார். ஜெமிமா ரோட்ரிகஸ் 26 (15) ஓட்டங்களும், ஹர்மன்பிரீத் 10 (12) ஓட்டங்களும் எடுத்தனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |