காஷ்மீர் பிரச்சனை தீர்க்கப்படும் வரை அமைதி சாத்தியமில்லை.. பதவியேற்ற பாகிஸ்தான் பிரதமர்!
பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக பதவி ஏற்றுக் கொண்ட ஷெபாஸ் ஷெரீப், காஷ்மீர் பிரச்சனை தீர்க்கப்படும் வரை நிலையான அமைதி சாத்தியமில்லை என தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் இம்ரான் கான் பதவியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஏப்ரல் 11 ஆம் திகதி பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் பதவியேற்றார்.
அதனைத் தொடர்ந்து ஜனநாயக முறைப்படி ஷெபாஸ் பதவி பிரமாணம் செய்து கொண்டார். அவருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். அதற்கு நன்றி தெரிவித்த ஷெபாஸ், இந்தியாவுடன் அமைதியான மற்றும் கூட்டுறவு உறவை பாகிஸ்தான் விரும்புகிறது எனவும் குறிப்பிட்டார்.
இந்நிலையில், தேசிய சட்டமன்றத்தில் தனது முதல் உரையில் பேசிய ஷெபாஸ் ஷெரீப், 'நாங்கள் இந்தியாவுடன் நல்லுறவை விரும்புகிறோம். ஆனால் காஷ்மீர் பிரச்சனை தீர்க்கப்படும் வரை நிலையான அமைதி சாத்தியமில்லை' என கூறியுள்ளார்.