கேப்டனாக முதல் போட்டியிலேயே வெற்றி! தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தான் அபாரம்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், ஷாஹீன் ஷா அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் முதல் வெற்றியை சுவைத்தது.
டி காக், பிரிட்டோரியஸ் அரைசதம்
பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஃபைசலாபாத்தில் நடந்தது. முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 49.1 ஓவரில் 263 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
Really delighted to see Naseem Shah in some rhythm again.
— Ahmad Haseeb (@iamAhmadhaseeb) November 4, 2025
- He is someone who can bowl with both new and old at any stage of the game. His line & length can cause trouble for batter anytime.#PAKvSA pic.twitter.com/cycVeOCeIw
குயின்டன் டி காக் (Quinton de Kock) 71 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 63 ஓட்டங்களும், லுஹூன்-ட்ரே பிரிட்டோரியஸ் 60 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 57 ஓட்டங்களும் எடுத்தனர். நசீம் ஷா, அப்ரார் அகமது தலா 3 விக்கெட்டுகளும், சைம் அயூப் 2 விக்கெட்டுகளும், மொஹம்மது நவாஸ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகளுக்கு 264 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
சல்மான் அகா அபாரம்
அதிகபட்சமாக சல்மான் அகா (Salman Agha) 71 பந்துகளில் 62 ஓட்டங்களும், மொஹம்மது ரிஸ்வான் (Mohammad Rizwan) 74 பந்துகளில் 55 ஓட்டங்களும் எடுத்தனர்.
தென் ஆப்பிரிக்காவின் தரப்பில் லுங்கி இங்கிடி, பெர்ரேய்ரா மற்றும் போஷ் தலா 2 விக்கெட்டுகளும், லிண்டே மற்றும் பிஜுரன் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பாகிஸ்தானின் ஒருநாள் கிரிக்கெட் அணித்தலைவராக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே ஷாஹீன் ஷா அப்ரிடி (Shaheen Afridi) வெற்றியை ருசித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Got a little too close for comfort, but Pakistan get the job done in the end 💪 pic.twitter.com/zVTKKOLUpC
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 4, 2025
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |