இந்திய அணிக்கு திருப்பி கொடுத்த மேற்கிந்திய தீவுகள்! அடித்து நொறுக்கிய கேப்டன்
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இஷான் கிஷன் அரைசதம்
கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி 181 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இஷான் கிஷன் 55 ஓட்டங்களும், சுப்மன் கில் 34 ஓட்டங்களும் எடுத்தனர். ஷெப்பர்ட், மொட்டி தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
அதன் பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில் பிரண்டன் கிங் 15 ஓட்டங்களில் அவுட் ஆனார்.
மற்றொரு தொடக்க வீரர் கைல் மேயர்ஸ் 36 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். அதனசி (6), ஹெட்மையர் (9) சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
BCCI Twitter
ஹோப் - கர்ட்டி கூட்டணி
எனினும் கேப்டன் ஷாய் ஹோப், கர்ட்டி கூட்டணி நிலைத்து நின்று ஆடி 37வது ஓவரிலேயே அணியை வெற்றி பெற வைத்தது.
ஷாய் ஹோப் 80 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 63 ஓட்டங்களும், கர்ட்டி 65 பந்துகளில் 48 ஓட்டங்களும் எடுத்தனர். இந்திய அணியின் ஷர்த்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம் முதல் போட்டியில் அடைந்த படுதோல்விக்கு மேற்கிந்திய தீவுகள் அணி பழி தீர்த்துக் கொண்டது.
AFP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |