கோலி, ரோகித் இல்லாமல் களமிறங்கி 181 ஓட்டங்களுக்கு சுருண்ட இந்திய அணி
பிரிட்ஜ்டவுன் ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகளின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி 181 ஓட்டங்களுக்கு சுருண்டது.
கோலி, ரோகித்திற்கு ஓய்வு
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் நடந்து வருகிறது.
கோலி, ரோகித் சர்மாவுக்கு பதிலாக சஞ்சு சாம்சன், அக்சர் படேல் சேர்க்கப்பட்டனர். ஹர்திக் பாண்ட்யா தலைமை தாங்கினார்.
நாணய சுழற்சில் வென்று மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் துடுப்பாடியது.
சிறப்பான தொடக்கம்
இஷான் கிஷன் மற்றும் சுப்மன் கில் சிறப்பான தொடக்கத்தை அமைத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 90 ஓட்டங்கள் குவித்தது.
கில் 34 ஓட்டங்களில் அவுட் ஆக, அரைசதம் அடித்த இஷான் கிஷனும் 55 ஓட்டங்களில் ஷெப்பர்ட் ஓவரில் ஆட்டமிழந்தார்.
X/@BCCI
சுருண்ட இந்திய அணி
அதன் பின்னர் இந்திய அணி சரிவுக்குள்ளானது. சூர்யகுமார் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 24 ஓட்டங்கள் எடுத்தார். ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறியதால் இந்திய அணி 40.5 ஓவரில் 181 ஓட்டங்களுக்கு சுருண்டது.
குடகேஷ் மொட்டி, ரோமரியோ ஷெப்பர்ட் தலா 3 விக்கெட்டுகளும், அல்சரி ஜோசப் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
BCCI | Twitter
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |