மே.தீவுகளுக்கு மரண அடி கொடுத்த குல்தீப், ஜடேஜா! முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி பந்துவீச்சு தெரிவு
பார்படோஸில் இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது.
நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகளுக்கு ஹர்திக் பாண்ட்யா அதிர்ச்சி கொடுத்தார்.
Twitter (Windiescricket)
அவரது ஓவரில் மேயெர்ஸ் 2 ஓட்டங்களில் அவுட் ஆனார். அதன் பின்னர் அதனாஸி 22 ஓட்டங்களிலும், பிரண்டன் கிங் 17 ஓட்டங்களிலும் வெளியேறினர். ஜடேஜா ஓவரில் ஹெட்மையர் (11) அவுட் ஆன போது மேற்கிந்திய தீவுகள் 88/4 என்ற நிலையில் இருந்தது.
குல்தீப் மாயாஜால பந்துவீச்சு
அப்போது குல்தீப் யாதவ் தனது மாயாஜால சுழலில் மேற்கிந்திய தீவுகளை மூழ்கடித்தார். அவரது மிரட்டல் பந்துவீச்சில் அடுத்தடுத்து வீரர்கள் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதனால் மேற்திந்திய தீவுகள் 23 ஓவர்களில் 114 ஓட்டங்களுக்கு சுருண்டது. இறுதிவரை போராடிய கேப்டன் ஷாய் ஹோப் 45 பந்துகளில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 43 ஓட்டங்கள் எடுத்தார்.
இந்திய அணியின் தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், ஜடேஜா 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
Twitter (Bcci)
நட்சத்திர வீரர்கள் சொதப்பல்
எளிய இலக்கு என களமிறங்கிய இந்திய அணிக்கு 4வது ஓவரில் அதிர்ச்சி காத்திருந்தது. கில் 7 ஓட்டங்களில் சீல்ஸ் ஓவரில் அவர் ஆனார்.
அதன் பின்னர் வந்த சூர்யகுமார் 19 ஓட்டங்களிலும், ஹர்திக் பாண்ட்யா 5 ஓட்டங்களிலும் வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ஷர்துல் தக்கூர் ஒரு ரன்னில் அவுட் ஆக ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
[ Twitter (Bcci)]
இஷான் கிஷன் அரைசதம் எனினும் தொடக்க வீரரான இஷான் கிஷன் அதிரடியாக 52 (46) ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். இறுதியில் இந்திய அணி 22.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 118 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஜடேஜா 16 ஓட்டங்களும், ரோகித் சர்மா 12 ஓட்டங்களும் எடுத்தனர். மேற்கிந்திய தீவுகளின் மோட்டி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |