Tata Motors நிறுவனத்திற்கு புதிய CEO நியமனம்
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் சைலேஷ் சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்.
Jaguar Land Rover-ல் ஏற்பட்ட மேலாண்மை மாற்றங்களைத் தொடர்ந்து, டாடா குழுமம் தனது தலைமை குழுவை மறுசீரமைக்கிறது.
சைலேஷ் சந்திராவின் பதவிக்காலம் அக்டோபர் 1,2025 முதல் செப்டம்பர் 30, 2028 வரை மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இவர், Tata Passenger Electric Mobility-யின் தலைவராகவும் தொடரவுள்ளார். இது டாடா மோட்டார்ஸின் முழுமையாக சொந்தமான மின்சார வாகன பிரிவாகும்.
முன்னாள் குழும CEO PB பாலாஜி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, சந்திராவின் பதவி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
சைலேஷ் சந்திரா, IIT மற்றும் IIM போன்ற உயர்தர கல்வி நிறுவனங்களில் பயின்றவர். தொழில்நுட்பம் மற்றும் வணிக மேலாண்மை ஆகிய இரு துறைகளிலும் அவருக்கு ஆழ்ந்த அனுபவம் உள்ளது.
டாடாவின் மின்சார வாகன வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர் என்பதால் இந்த பதவி உயர்வு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |