டி20 வரலாற்றில் எந்த ஜாம்பவானும் செய்யாத இமாலய சாதனை! 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர்
வங்காளதேச அணியின் ஜாம்பவான் வீரர் ஷாகிப் அல் ஹசன் டி20 கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள், 7000 ஓட்டங்கள் எடுத்து வரலாறு படைத்தார்.
ஷாகிப் 3 விக்கெட்டுகள்
CPL 2025 போட்டியில் ஆன்டிகுவா மற்றும் செயின்ட் கிட்ஸ் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.
இதில் ஆன்டிகுவா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் செயின்ட் கிட்ஸ் அணியை வீழ்த்தியது.
மிரட்டலாக பந்துவீசிய ஷாகிப் அல் ஹசன் (Shakib Al Hasan) 2 ஓவர்கள் வீசி 11 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இமாலய சாதனை
அத்துடன் துடுப்பாட்டத்திலும் கலக்கிய அவர், 18 பந்துகளில் 2 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 25 ஓட்டங்கள் விளாசினார்.
ஷாகிப் அல் ஹசன் டி20 கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எனும் இமாலய மைல்கல்லினை எட்டினார்.
இதன்மூலம் 7000 ஓட்டங்களுடன் 500 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய ஒரே வீரர் எனும் இமாலய சாதனையை அவர் படைத்தார்.
তিন বর্ণে সাকিব, তিন সংখ্যায় ইতিহাস #CPL2025 #ShakibAlHasan #BangladeshCricket #BDCricTime pic.twitter.com/VG2oeFJse0
— bdcrictime.com (@BDCricTime) August 24, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |