ரசிகரின் தலையில் ஓங்கி பலமுறை அடித்த வங்காளதேச கிரிக்கெட் வீரர்! வைரலாகும் வீடியோ
வங்காளதேச அணியின் நட்சத்திர வீரரான ஷாகிப் அல் ஹசன் (Shakib Al Hasan), தன்னுடைய ரசிகர் ஒருவரை கோபத்தில் 3 முறை ஓங்கி தலையிலேயே அடித்துள்ள சம்பவம் சர்ச்சையாகியுள்ளது.
இங்கிலாந்து அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம்
வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர்களில் விளையாடிவருகிறது.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் தோல்வியுற்ற நிலையில், கடைசி ஒருநாள் போட்டியை தன்னுடைய அபாரமான பந்துவீச்சின் உதவியால் காப்பாற்றி கொடுத்தார் ஷாகிப் அல் ஹசன்.
இப்போட்டியில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஷாகிப், தனது அணி ஒயிட்வாஸ் ஆவதை தடுத்து நிறுத்தி சிறப்பான பங்களிப்பை கொடுத்தார். இப்போட்டியில், இங்கிலாந்து அணி 156 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த நிலையில், 157 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய வங்கதேச அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
Getty
ரசிகரின் தலையில் ஓங்கி அடித்த ஷாகிப்
இதையடுத்து, இரு அணுக்களுக்கு இடையேயான முதல் டி20 போட்டி முடிந்து சுமார் மூன்று மணி நேரம் கழித்து, ஷாகிப் சில வணிக விளம்பரங்களில் நடிப்பதற்காக சென்றார். அப்போது அங்கு வந்த ஏராளமான ரசிகர்கள் ஷாகிப் அல் ஹசனை சூழ்ந்தனர்.
அப்போது, ஷாகிப் நெரிசலில் இருந்து அவருடைய காருக்குள் ஏறுவதற்கு ஒருவழியாக செல்லும் போது, ரசிகர்களில் ஒருவர் அவரது தலையில் இருந்த தொப்பியை எடுத்துகொண்டார்.
அப்போது கடுமையாக கோபப்பட்ட ஷாகிப், அந்த தொப்பியை பிடிங்கி, அதே தொப்பியால் ஓங்கி மூன்று முறை அந்த ரசிகரின் தலையில் அடித்துவிட்டு காருக்குள் ஏறினார்.
— Out Of Context Cricket (@GemsOfCricket) March 11, 2023
ஏற்கனவே பல சர்ச்சைகளில் மாட்டிக்கொண்டுள்ள ள்ளும் ஷாகிப் அல் ஹசன், தற்போது இந்த சம்பவத்தால் மீண்டும் வைரலாகியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.