1.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்று MP ஆன வங்கதேச கேப்டன்! ரசிகரை அறைந்த வீடியோ வைரல்
வங்கதேச கிரிக்கெட் அணி கேப்டன் ஷாகிப் அல் ஹசன், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், அவர் நபர் ஒருவரை அறைந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
வங்கதேச கேப்டன்
ஷாகிப் அல் ஹசன் மகுரா மேற்கு நகரின் நாடாளுமன்றத் தொகுதியில் நடந்த தேர்தலில் போட்டியிட்டார்.
அதில் அவர் சுமார் 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று MP ஆனார்.
கிரிக்கெட் உலகில் சர்ச்சைகளுக்கு பெயர்போன ஷாகிப் அல் ஹசன், அரசியலில் மாபெரும் வெற்றி பெற்று பேசு பொருளானார்.
Shakib Al Hasan slapped a fan..!pic.twitter.com/KaUbabgkCX
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 7, 2024
அறைந்த ஷாகிப்
ஆனால் அதனை விட அவர் செய்த விடயம் ஒன்று தான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின்போது பொதுவெளியில் ஷாகிப், ரசிகர் ஒருவரை பகிரங்கமாக அறைந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஏற்கனவே, சில ஆண்டுகளுக்கு முன்னர் டாக்கா பிரீமியர் லீக்கின்போது, நடுவர்களிடம் ஷாகிப் கோபத்தை காட்டியதற்காக இடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |