2021 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஷாகின்பாக் கூட்டமைப்பு முழு ஆதரவு !
2021 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக ஒருங்கிணைந்த ஷாகின்பாக் கூட்டமைப்பு அறிவத்துள்ளது. ஏப்ரல் 6ம் திகதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காத நாம் தமிழர் கட்சி, தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கு 117 ஆண்களை, 117 பெண்களை வேட்பாளர்களாக அறிவித்தது.
இந்நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக ஒருங்கிணைந்த ஷாகின்பாக் கூட்டமைப்பு அறிவத்துள்ளது.
தமிழகத்தில் தொலைநோக்கு திட்டத்தின் அடிப்படையில் முஸ்லிம்களின் ஆதரவு அமைய வேண்டும். காலம் காலமாக திராவிட காட்சிகள் முஸ்லிம்களை அடிமை வம்சம் போல் உருவாக்கி வருகின்றனர்.
ஆகவே திராவிட கட்சிகளுக்கு மாற்றான ஒன்றை தேர்தெடுத்தால் மட்டுமே முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் சாத்தியப்படும்.
அடுத்த தலைமுறைக்கு அதிகாரத்தை கொண்டு செல்ல, ஏற்கனவே ஆட்சி அதிகாரத்தில் சமமான பிரநிதித்துவம் பெற்றிருந்த இஸ்லாமிய சமுதாயம் மீண்டும் அந்த நிலையை அடைய வேண்டுமானால் சரியான ஒரு இலங்கை அடைய வேண்டும் என்ற அடிப்படையில் 2021 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக ஒருங்கிணைந்த ஷாகின்பாக் கூட்டமைப்பு அறிவத்துள்ளது.
