அரபிக்கடலில் உருவான சக்தி புயல்.., 12 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை
அரபிக்கடலில் உருவான சக்தி புயலால் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
வடகிழக்கு பருவமழையின் முதல் சூறாவளியாக அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தற்போது புயலாக உருவாகியுள்ளது.
சக்தி என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் தீவிர புயலாக மாறக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
மேலும், நாளைக்குள் வடக்கு மற்றும் மத்திய அரேபிய கடலில் மத்திய பகுதிகளை அடைய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
கடலுக்குள் மேற்கே நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுவதால் கடலோர பகுதிகளில் மீனவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கடலுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், சக்தி புயல் காரணமாக இன்று தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிபேட்டை, வேலூர், திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராமநாதபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் ஓரிரு பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும், சில சமயங்களில் தீவிரமடையலாம் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |