பிக் பாஷில் 99 ஓட்டங்களுக்கு சுருண்ட அணி: 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டிய ஷம்ஸி
BBL 2025-26 தொடரின் இன்றையப் போட்டியில், அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மெல்போர்ன் ரெனெகேட்ஸை வீழ்த்தியது.
99 ஓட்டங்களுக்கு சுருண்ட மெல்போர்ன்
அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடந்த போட்டியில் மெல்போர்ன் ரெனெகேட்ஸ் மற்றும் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் மோதின.
codesports.com
வாதியா பந்துவீச்சில் செய்ஃபெர்ட் மற்றும் ஜேக் ஃப்ரேஸர்-மெக்கர்க் ஆகிய இருவரும் டக்அவுட் ஆகினர். பிரவுன் 6 ஓட்டங்களில் வெளியேற, ரிஸ்வான் 17 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் ஜுவெல் 14 ஓட்டங்களிலும், ஹஸன் கான் 17 ஓட்டங்களிலும் போப் ஓவரில் அவுட் ஆகினர்.
ஷம்ஸி மிரட்டல்
அணித்தலைவர் வில் சதர்லேண்ட் (Will Sutherland) மட்டும் தனியாக போராட(38 ஓட்டங்கள்), ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேற மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணி 99 ஓட்டங்களுக்கு சுருண்டது.
அபாரமாக பந்துவீசிய தப்ரைஸ் ஷம்ஸி (Tabriz Shamsi) 15 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அடுத்து ஆடிய அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் 11.5 ஓவர்களில் 100 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மேத்யூ ஷார்ட் 30 (22) ஓட்டங்களும், கிறிஸ் லின் 27 (25) ஓட்டங்களும் விளாசினார்.
BBL/X
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |