தசுன் ஷானகாவின் மிரட்டலில் 122 ரன் இலக்கை எட்டமுடியாமல்..சூப்பர் கிங்ஸ் படுதோல்வி
மேஜர் லீக் போட்டியில் சியாட்டில் ஓர்கஸ் அணி 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது.
விக்கெட்டுகளை பறிகொடுத்த சியாட்டில் ஓர்கஸ்
டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் சியாட்டில் ஓர்கஸ் அணிகளுக்கு இடையிலான மேஜர் லீக் போட்டி போமோனாவில் நடந்தது.
முதலில் ஆடிய சியாட்டில் ஓர்கஸ் அணி அம்ஷி, மில்னேவின் பந்துவீச்சில் விக்கெட்டுகளை அடுத்தது பறிகொடுத்தது.
எனினும், 20 ஓவர்கள் முழுமையாக ஆடிய சியாட்டில் ஓர்கஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 121 ஓட்டங்கள் எடுத்தது.
கன்னோன் 20 ஓட்டங்களும், அலி ஷேக் 18 ஓட்டங்களும், தசுன் ஷானகா 16 ஓட்டங்களும் எடுத்தனர். அம்ஷி டி சில்வா 3 விக்கெட்டுகளும், ஆடம் மில்னே 2 விக்கெட்டுகளும், தியான், முல்டர் மற்றும் லம்பா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஷானகாவின் மிரட்டலான பந்துவீச்சு
பின்னர் ஆடிய டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி, தசுன் ஷானகாவின் (Dasun Shanaka) மிரட்டலான பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தது.

ஷுபம் ரஞ்சன் மட்டும் நிலைத்து நின்று ஆட, டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 112 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
கடைசி வரை களத்தில் நின்ற ஷுபம் ரஞ்சன் (Shubham Ranjane) 40 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சியாட்டில் அணி வெற்றி பெற்றது.
அபாரமாக பந்துவீசிய தசுன் ஷானகா 4 விக்கெட்டுகளும், ஓட்னெய்ல் பார்ட்மேன் 3 விக்கெட்டுகளும், ஸ்டோய்னிஸ் மற்றும் ஜஸ்தீப் சிங் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
Swept all the awards today 💚#SeattleOrcas #AmericasFavoriteCricketTeam #MLC2026 #SOvTSK #DasunShanaka | @dasunshanaka1 pic.twitter.com/rkapLymcZh
— Seattle Orcas (@MLCSeattleOrcas) July 6, 2026
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |