கோவிட் தடுப்பூசியால் ஷேன் வார்னே மரணமா? அதிர்ச்சி கொடுத்த பிரித்தானியா மருத்துவர்கள்
அவுஸ்திரேலிய கிரிக்கெட்டில் ஜாம்பவானாக விளங்கிய ஷேன் வார்னே மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அவரது மரணத்துடன் கோவிட் தடுப்பூசிக்கு தொடர்புள்ளது என மருத்துவர்கள் ஆய்வில் தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜாம்பவான் வீரரின் மரணம்
டெஸ்ட் கிரிக்கெட்டில் 708 விக்கெட்டுகள் வீழ்த்தி உலகளவில் இரண்டாவது (முரளிதரன் 800) இடமும், அவுஸ்திரேலிய வரலாற்றில் முதலிடமும் பிடித்தவர் ஷேன் வார்னே.
ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் (2008) ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்தி கோப்பையை வென்று கொடுத்தார்.
Getty Images
16 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் கோலோச்சிய வார்னே, கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் திகதி மாரடைப்பால் மரணமடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி விடயம்
வார்னே இறந்து ஒரு வருடம் கடந்துள்ளது. இந்நிலையில், அவுஸ்திரேலிய மருத்துவ வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் கிறிஸ் நீல் மற்றும் அசீம் மல்ஹோத்ரா ஆகியோர் வார்னேயின் பிரேத பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்தனர்.
அதன் முடிவில் வார்னேவுக்கு இதய நோய் இருந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மருத்துவர்கள் தரப்பில் கூறுகையில், 'ஏற்கனவே கண்டறியப்படாத லேசான இதய நோய் உள்ளவர்களுக்கு, ஒரு கோவிட் எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசியானது, அவர்களின் உடல்நிலையில் விரைவான முடுக்கத்தை ஏற்படுத்தக் கூடும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மல்கோத்ரா கூறுகையில், 'சர்வதேச முன்னாள் விளையாட்டு வீரர்கள், இவ்வளவு இளம் வயதில் (52) திடீரென மாரடைப்பால் மரணம் அடைவது மிகவும் அசாதாரணமானது. அதே நேரத்தில், ஷேன் வார்னே சமீபத்திய ஆண்டுகளில் அதிக ஏடை கொண்டவராகவும், அதிகமாக புகைப்பழக்கத்தையும் கொண்டவராகவும் இருந்துள்ளார்.
இத்தகைய செயல்களால், அவர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கொண்டிருக்கவில்லை என்பதையும் நாங்கள் அறிவோம். அவரது தமனிகளில் சில லேசான பாதிப்புகள் இருந்தன. என்றாலும் அவர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை செலுத்திய பிறகு வேகமாக முன்னேறினார்' என தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா உட்பட உலகமெங்கும் காணப்படும் அதிக மரணங்களுக்கு கோவிட் எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகள் முக்கிய காரணம் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.
இதுதொடர்பான விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், உலகம் முழுவதும் அவற்றின் பயன்பாடு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் மருத்துவம் மல்ஹோத்ரா வலியுறுத்தியுள்ளார்.
Getty
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |