ஷேன் வார்னே மரணத்திற்கு கோவிட் தடுப்பூசியே காரணம் - மகன் குற்றச்சாட்டு
ஷேன் வார்னே மரணத்திற்கு கோவிட் தடுப்பூசியே காரணம் என மகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஷேன் வார்னே
அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவானான ஷேன் வார்னே, கடந்த 2022 ஆம் ஆண்டில் தாய்லாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது மாரடைப்பால் உயிரிழந்தார்.

இந்நிலையில், பாட்காஸ்ட் ஒன்றில் பேசிய ஷேன் வார்னே மகன் ஜான்சன், தனது தந்தையின் மரணத்திற்கு கோவிட் தடுப்பூசி தான் காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளார்.
கோவிட் தடுப்பூசி
இது குறித்து பேசிய அவர், நிச்சயமாக கோவிட் தடுப்பூசி சம்பந்தப்பட்டிருக்கிறது என்று நான் நினைக்கிறேன். இதைச் சொல்வது இப்போது சர்ச்சைக்குரியது என்று கூட நான் நினைக்கவில்லை.
அப்பாவுக்கு முன்பே உடல்நலப் பிரச்சினைகள் இருந்தாலும்கூட, இது அதை வெளிக்கொண்டு வந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். ஆம், முன்பும் நிறைய பேர் மாரடைப்பால் இறந்து கொண்டிருந்தார்கள்.

ஆனால் அப்பா நலமாக இருந்தார். அவர் 3 அல்லது 4 தடுப்பூசி டோஸ்களை போட்டிருப்பார் என்று நினைக்கிறேன். அவருக்கு அவற்றை போட்டுக்கொள்ள விருப்பமில்லை, வேலைக்காக அவர் கட்டாயப்படுத்தப்பட்டார்.
மற்ற எல்லோரையும் போலவே அவரும் அவற்றை போட்டுக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டார். அவரது நினைவஞ்சலி நிகழ்விலே நான் இதனை வெளிப்படுத்த திட்டமிட்டிருந்தேன்.
ஆனால் மிகவும் சிரமப்பட்டுத் கட்டுப்படுத்திக் கொண்டேன் நான் அப்படிச் செய்யாதது ஒருவேளை புத்திசாலித்தனமாக இருந்திருக்கலாம், அப்படிச் செய்திருந்தால் நான் முற்றிலும் வேறுபட்ட ஒரு நிலையில் இருந்திருப்பேன்" என தெரிவித்துள்ளார்.