டிரேடிங் மூலம் வாங்கப்பட்ட ஷர்துல் தாக்கூர், ரூதர்ஃபோர்ட் - எந்த அணியில் தெரியுமா?
2026 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 16 ஆம் திகதி அபுதாபியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிரேடிங்கில் ஷர்துல் தாக்கூர், ரூதர்ஃபோர்ட்
இதனிடையே 10 அணிகளும் இந்த மினி ஏலத்திற்கு முன்னர் தக்க வைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 15 ஆம் திகதிக்குள் வெளியிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், பல்வேறு வீரர்களை ஐபிஎல் அணிகள் டிரேடிங் மூலம் பரிமாற்றம் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது.
ராஜஸ்தான் ராயல்ஸ்(RR) வீரர் சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ்(CSK) அணிக்கு வர உள்ளதாகவும், அதற்கு பதிலாக CSK வீரர் ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்(LSG) அணியின் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர்(Shardul Thakur) முதல் வீரராக டிரேட் செய்யப்பட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணி அவரை ரூ.2 கோடிக்கு வாங்கியுள்ளது.

அதே போல், குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியில் இருந்த மேற்கிந்திய தீவுகள் வீரரான ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட்(Sherfane Rutherford), ரூ.2.6 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |