பொருளாதார நெருக்கடியில் மக்கள் சிரமம்., சொகுசு விமானம் தயாரித்த பாகிஸ்தான் பிரதமர்
பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்காக ஒரு அதிநவீன சொகுசு ஜெட் விமானம் தயாரிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
2022 மே மாதத்தில் மனிதநேய பணிக்காக பாகிஸ்தான் விமானப்படை வாங்கிய A-1102 Airbus 319 விமானம், தற்போது VIP பயணங்களுக்கானதாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த விமானம், 204 ஜூலை மாதத்தில் பிரபல மலையேறும் வீராங்கனை சமினா ஸ்கார்டுவிலிருந்து ராவல்பிண்டிக்கு கொண்டு செல்லும் நோக்கில் பயன்படுத்தப்பட்ட்டது.
ஆனால், தற்போது ஏர் சீஃப் மார்ஷல் ஜாகீர் அகமது பாபர் சித்துவின் ஒப்புதலுடன், இந்த விமானம் அமெரிக்க ஜனாதிபதியின் Air Force One போலவே, தனியார் படுக்கையறைகள், உயர்தர லவுஞ்சுகள், நவீன தகவல் தொடர்பு வசதிகள் கொண்ட ஜெட்டாக மாற்றப்பட்டுள்ளது.
பிரதமர் ஷெரீப்பின் சவுதி அரேபியா, பிரித்தானியா மற்றும் அமெரிக்க பயணங்களுக்கு இந்த புதிய ஜெட் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவுடன் ஏற்பட்ட Operation Sindoor மோதலுக்கு பின்னர் விமானப்படை தலைவரின் பதவிக்காலத்தை நீட்டித்த ஷெரீப்பை மகிழ்விப்பதற்காக, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Shehbaz Sharif, Air Ambulance to Luxury Jet, Pakistan PM VIP Jet Controversy, Shehbaz Sharif Luxury Jet