ஷார்ஜாவில் வசிக்கும் இந்திய பெண்ணுக்கு Big Ticket லொட்டரியில் விழுந்த Dh25,000 பரிசு
Sharjah Indian Expat Wins First Big Ticket Prize:Big Ticket லொட்டரியில் ஷார்ஜாவில் வசிக்கும் இந்திய பெண்ணுக்கு Dh25,000 பரிசு விழுந்தது.
கேரளத்தைச் சேர்ந்த அர்த்ரா கிழக்கே சேதில்
ஷார்ஜாவில் வசித்து வரும் கேரளத்தைச் சேர்ந்த 27 வயதான அர்த்ரா கிழக்கே சேதில் (Ardra Kizhakke Chethil) என்ற பெண், Big Ticket நிறுவனத்தின் நவம்பர் மாத முதல் வாராந்திர மின் குலுக்கலில் Dh25,000 (சுமார் ரூ.5.7 லட்சம்) பரிசை வென்றுள்ளார்.
இந்த செய்தி அவருக்கே முதலில் நம்ப முடியாத ஒன்றாக இருந்தது.

அர்த்ரா, ஒரு கட்டிட நிர்வாகியாக ஷார்ஜாவில் பணியாற்றி வருகிறார். சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு தனது கணவருடன் ஷார்ஜாவிற்கு குடிபெயர்ந்தார்.
அவரது கணவரின் நண்பர்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து Big Ticket குலுக்கலில் பங்கேற்று வந்த நிலையில், சமீபத்தில்தான் அவர் அந்த குழுவில் இணைந்தார். 10 பேர் கொண்ட அந்த குழுவினர் சேர்ந்து ஒரு டிக்கெட்டை வாங்கியிருந்தனர்.
உண்மை என்பதை உணர்ந்தேன்
அதில் முதல் முறையாக டிக்கெட் அர்த்ராவின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. வெற்றி பெற்றதாக Big Ticket குழுவிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தபோது, அதை முதலில் யாரோ விளையாட்டாக பேசுகிறார்கள் என்று அவர் நினைத்துள்ளார்.
“வாரத்தின் நடுவில் எனக்கு வெற்றி அழைப்பு வரும் என்று எதிர்பார்க்கவில்லை. அவர்கள் சொன்னதை எல்லாம் சிரித்துக்கொண்டே ஏற்றுக் கொண்டேன். பின்னர் Big Ticket இணையதளத்தில் பார்த்தபோதுதான் அது உண்மை என்பதை உணர்ந்தேன்,” என்று அர்த்ரா தெரிவித்தார்.
பல ஆண்டுகளாக தொடர்ந்து முயற்சி செய்துவந்த இந்த 10 பேர் கொண்ட குழுவிற்கு இது முதல் வெற்றியாகும். இதனால் குழுவில் உள்ள அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். வெற்றிபெற்ற Dh25,000 தொகையை 10 பேரும் சமமாகப் பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
இந்த வார குலுக்கலில் அர்த்ராவுடன் மேலும் மூவர் Dh25,000 பரிசை பெற்றுள்ளனர். அவர்கள் ஈராக், இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்தவர்கள். அனைவருக்கும் தலா Dh25,000 வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், Big Ticket-ன் நவம்பர் மாதத்தில் Dh25 மில்லியன் (சுமார் ரூ.57 கோடி) மதிப்பிலான மாபெரும் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வெற்றியாளர் டிசம்பர் 3-ஆம் திகதி நடைபெறும் நேரடி குலுக்கலில் அறிவிக்கப்பட உள்ளார். தொடர்ந்து அதிர்ஷ்டத்தைச் சோதிக்க அர்த்ரா மற்றும் அவரது நண்பர்கள் ஏற்கனவே அடுத்த குலுக்கலுக்கான டிக்கெட்டுகளையும் வாங்கியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |