அவுஸ்திரேலிய கடற்கரையில் பெண்ணை கடித்து கொன்ற சுறா: துரித நடவடிக்கையால் உயிர் தப்பிய இளைஞர்
அவுஸ்திரேலிய கடற்கரையில் நடந்த சுறா தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சுறா தாக்குதல்
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள கடற்கரை ஒன்றில் கொடூரமான சுறா தாக்குதல் நடந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சுறா தாக்குதலில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்து இருப்பதுடன், இளைஞர் ஒருவர் ஆபத்தான காயங்களுடன் நியூகாஸில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் சிட்னியில் இருந்து சுமார் 300 கி.மீ தொலைவில் அமைந்துள்ள க்ரெளடி பே தேசியப் பூங்காவின் கைலீஸ் கடற்கரையில் நடந்துள்ளது.
சுறா தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட இருவரும் கடல் நீரில் நீந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
பார்வையாளரின் துரித நடவடிக்கை
சுறா தாக்குதலின் போது சம்பவ இடத்தில் இருந்த பார்வையாளர் ஒருவர், சுறா தாக்குதலில் பாதிக்கப்பட்ட இளைஞரின் காலில் இரத்த போக்கை தடுக்க தற்காலிக கட்டு ஒன்றை போட்டுள்ளார்.
இந்த துரித நடவடிக்கை இளைஞரின் உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்று குறிப்பிட்டு அந்த குறிப்பிட்டு நபருக்கு பாராட்டினை தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |