கடலில் நீந்தியவரை சூறையாடிய சுறா: சிட்னி கடற்கரையில் பரபரப்பு!
அவுஸ்திரேலியாவில் சுறா மீன் தாக்கியதில் ஆண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சுறா தாக்குதல்
சனிக்கிழமை காலை 10 மணிக்கு சிட்னியின் லாங் ரீஃப் கடற்கரையில் சுறா தாக்குதல் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த தாக்குதல் ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவர் மெர்குரி சில்லாக்கிஸ்(Mercury Psillakis) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
50 வயது மதிக்கத்தக்க மெர்குரி சில்லாக்கிஸுக்கு ஒரு மகள் உள்ள நிலையில், தந்தையர் தின கொண்டாட்டத்திற்கு முந்தைய நாள் இந்த துயர சம்பவம் ஏற்பட்டுள்ளது.
சுறா தாக்கியதும் கரைக்கு கொண்டு வரப்பட்ட மெர்குரி சில்லாக்கிஸ் பின்னர் சிகிச்சை பலனின்றி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுறா தாக்கிய போது, மெர்குரி சில்லாக்கிஸ் “என்னை கடிக்காதே” என கத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தை அடுத்து கடற்கரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மேலும், மெர்குரி சில்லாக்கிஸை தாக்கிய சுறா இனத்தை கண்டறிய சிட்னி பொலிஸார் வனவிலங்கு நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |